| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| தொடரும் நித்தியானந்தாவின் லீலைகள்: ராஜபாளையத்தில் 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 06:59.09 AM GMT +05:30 ] |
ராஜபாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் நித்யானந்தா, 10க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக ராஜபாளையம் டி.எஸ்.பி.யிடம் நற்பணி மன்றத் தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். |
ராஜபாளையத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட நலத் திட்டங்களை செய்து வரும் தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் தலைவர் ராமராஜ், ராஜபாளையம் டி.எஸ்.பி. முருகேசனிடம் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் ராமராஜ் கூறியிருப்பதாவது: ராஜபாளையம் கோதைநாச்சியார்புரம் பகுதியில் 5 ஏக்கரில் நித்யானந்த பீடம் என்ற பெயரில் தியான ஆசிரமம் உள்ளது. ஆண்டுதோறும் நித்யானந்தா இங்கு வந்து தியானம் மற்றும் சத்சங்கம் நடத்தி வந்தார்.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதும், ராஜபாளையம் நகரை சேர்ந்த பல பெண்கள் என்னிடம் அவரைப் பற்றி புகார் கூறினர். கடந்த 2009 டிசம்பரில் ராஜபாளையத்தைச் சேர்ந்த 10 பெண் பக்தர்களை பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு நித்யானந்தா அழைத்து சென்றுள்ளார். அங்கு இருட்டு அறையில் அவர்களுக்கு தீர்த்தம் என்று போதை மருந்து கொடுத்திருக்கிறார். அவர்கள் மயக்க நிலையில் இருக்கும் போது, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
மயக்கம் தெளிந்ததும் இதையறிந்த அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுமே என்று பயந்து வெளியில் சொல்லவில்லை. தற்போது நித்யானந்தாவின் சுய ரூபம் வெளிவந்தவுடன் தைரியமாக என்னிடம் தெரிவித்தனர். எனவே, நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான ஆதாரங்களை தரத் தயாராக உள்ளேன்.
மேலும், ராஜபாளையத்திற்கு நித்யானந்தா முன்பு வந்த போது, அர்த்த ஜாம பூஜை என்று கூறி, பெண் பக்தர்களை வரவழைத்து தவறாக நடந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது பற்றியும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு புகாரில் ராமராஜ் கூறியுள்ளார்.
மகனை மீட்க கோரி புகார்:
பெங்களூரிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கியுள்ள தனது மகன் சுரேந்திரனை மீட்டுத் தரக்கோரி திருச்சி நவலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் இடும்பன் நேற்று முன்தினம் ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், 2006 ஜூலை மாதம் பெங்களூரிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற என் மகன் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. ஆசிரமத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அங்குள்ளவர்கள் எந்த தகவலையும் சரிவர கூறவில்லை. எனவே, எனது மகனை மீட்டுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘ஆசிரமத்தில்தான் சுரேந்திரன் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்த ஆசிரம நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் பெங்களூர் ஆசிரமத்திற்கு செல்லவிருக்கிறோம்’ என்றனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|