தமிழ்நாட்டுச் செய்தி
ராகிங் புகாரில் சிக்கிய மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர வழக்கு
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:06.15 PM GMT +05:30 ]
ராகிங் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கோவை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மீண்டும் படிப்பை தொடர அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த மாணவர்கள் முத்துக்குமார், ரமணன், லோகேஷ், கார்த்திக் ஆகிய 4 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தோம். 3 ஆண்டுகளாக எங்கள் மீது எவ்வித ராகிங் புகாரும் வரவில்லை. இந்நிலையில் 4ம் ஆண்டு படிக்கும் போது ஜூனியர் மாணவர்களை நாங்கள் ராகிங் செய்ததாக உள்நோக்கத்துடன் விடுதி வார்டன் போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து கல்லூரியிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் சஸ்பென்ட் செய்யப்பட்டோம். இந்நிலையில் எங்கள் மீதான ராகிங் வழக்கை கோயம்புத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரித்து எங்களை விடுதலை செய்தது. இதையடுத்து மீண்டும் கல்லூரியில் சேர்க்கக் கோரி டீனுக்கு விண்ணப்பித்தோம். கடந்த 3 மாதமாக எங்களது விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எங்கள் மீதான சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்து மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி, ராகிங் குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ராகிங் சட்டம் இதை அனுமதிக்கிறது. ஆனால் கோவை மருத்துவக் கல்லூரி டீன் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதைக் கேட்ட நீதிபதி நாளை மறுநாள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்