தமிழ்நாட்டுச் செய்தி
மேட்டுப்பாளையம் தனியார் மில் தீவிபத்தில் ரூ.5 கோடி சேதம்
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:43.31 AM GMT +05:30 ]
மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தனியார் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ 5 கோடி அளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இங்கு டர்கிடவல் தயாரிக்க தேவையான மூலப் பொருளான பஞ்சுகளை ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். மில்லையொட்டி குடோன் உள்ளது. அதில் நூல், பஞ்சு பேல்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை 2 மணியளவில் மில்லின் குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதனை இரவு ஷிப்டு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பார்த்தனர். இகு குறித்து நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கோட்ட தீயணைப்பு அலுவலர் லூர்துநாதன், உதவி கோட்ட அலுவலர் பிரதீப்குமார் நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கோவை வடக்கு, தெற்கு தீயணைப்பு நிலையங் களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் சென்றது.

அதற்குள் தீ மள மளவென்று குடோன் முழுவதும் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறியது. சுவரிலும் விரிசல் ஏற்பட்டது. எந்த நேரத்திலும் குடோன் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இன்று காலை வரை தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் தாசில்தார் சுகுமாறன், பெரிய நாயக்கன் பாளையம் டி.எஸ்.பி மாரியப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் தப்பி வெளியேறி ஓடி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்