இந்தியச் செய்தி
பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால் நகரங்களை கைப்பற்றுவோம்: நக்சல் போராளிகளின் தலைவர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:45.05 PM GMT +05:30 ]
பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றுவோம் என மத்திய அரசுக்கு நக்சல் கம்யூனிஸ்ட் போராளிகளின் தலைவர் கிஷன்ஜி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
நக்சலைட் ஆதிக்கம் உள்ள 8 மாநிலங்களில் தேடுதல் வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில், மேற்குவங்கம் சில்டா முகாமில் தங்கியிருந்த போலீசார் மீது மாவோ தீவிரவாதிகள் கடந்த மாதம் 15&ம் தேதி நடத்திய தாக்குதலில் 24 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பின் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கிஷன்ஜி அறிவித்து, தனது செல்போன் நம்பரை மீடியாக்களுக்கு தெரிவித்தார். எந்த நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தங்களது கருத்துக்களை நக்சலைட்கள் தெரிவிக்கலாம் என பேக்ஸ் எண்ணை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டார்.

இந்நிலையில் சில்டா முகாம் தாக்குதலுக்கு நக்சல் தலைவர் கிஷன்ஜியின் நெருங்கிய நண்பர் தீபக்தான் காரணம் என தெரிந்தது. அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதையடுத்து பேட்டியளித்த கிஷன்ஜி, ‘‘தீபக்கை உடனே விடுவிக்க வேண்டும். சண்டை நிறுத்தம் செய்வது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாவோயிஸ்ட்கள் தயார். பாதுகாப்பு படையினர் தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் 72 மணி நேர சண்டை நிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்’’ என்றார். இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம், ‘‘கிஷன்ஜி முதலில் அளித்த வாக்குறுதிக்கு பின் 18 இடங்களில் வன்முறை நடந்துள்ளது. தற்போது சண்டை நிறுத்தம் பற்றி தீவிரமாக பேசுகிறார்கள். நக்சலைட்கள் 72 மணி நேரத்துக்கு வன்முறையை நிறுத்த வேண்டும். அதன் பின் அரசு நிச்சயமாக தாக்குதலை நிறுத்தும்’’ என தெரிவித்தது. அதன்பிறகு எந்த தாக்குதலையும் நக்சலைட்கள் நடத்தவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று போனில் பேட்டியளித்த கிஷன்ஜி கூறியிருப்பதாவது:

அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராவிட்டால், தாக்குதலை தீவிரப்படுத்துவோம். தேவைப்பட்டால் முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவோம். எனது செல்போன் நம்பரை கொடுத்து, கடந்த 25&ம் தேதி மாலை 3 மணி நேரம் காத்திருந்தேன். அரசு தரப்பில் யாரும் பேசவில்லை. மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியபடி 72 மணிநேரம் சண்டை நிறுத்தமும் செய்தோம். ஆனால் அரசு இதை மதிக்கவில்லை. மாறாக, அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி, எங்கள் பிரிவு தலைவர் லால்மோகனை சுட்டுக் கொன்றது.

வன்முறைக்கு நாங்கள்தான் காரணம் என அரசு குற்றம் சாட்டுகிறது. ஆதிவாசிகள் நலனுக்காக அரசு கடந்த 53 ஆண்டுகளாக என்ன செய்தது? இடஒதுக்கீட்டின் கீழ் 90 சதவீத ஆதிவாசிகளால் அரசு வேலை பெறமுடியவில்லை. இதற்கான விண்ணப்பங்கள் வராததால், இந்த ஒதுக்கீடுகள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. ஜார்கண்ட் முதல்வர் சிபுசோரன், பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால் எங்கள் பிரச்னையை புரிந்துகொள்வார் என நம்புகிறோம். அவரும் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இவ்வாறு கிஷன்ஜி கூறியுள்ளார்.

பல முக்கிய நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக அரசுக்கு நக்சல் இயக்கத் தலைவர் நேரடியாக மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்