தமிழ்நாட்டுச் செய்தி
நித்யானந்தாவின் கடவுச்சீட்டை முடக்கத்திட்டம்
[ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 04:45.29 PM GMT +05:30 ]
தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, அவரது கடவுச்சீட்டை உடனடியாக முடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர். தப்பிவிடாதபடி முக்கிய விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் உலகின் பல நாடுகளிலும் ஆசிரமம் நடத்தி வந்தவர் நித்யானந்தா. தியான பயிற்சிகள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் இவர் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை வீடியோ காட்சிகள் சமீபத்தில் டிவி, பத்திரிகைகளில் வெளியாயின. இது அவரது பக்தர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல நகரங்களிலும் அவரது ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவானார். ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருப்பதாகவும் கேரளாவில் இளம் பக்தையின் சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை ரஞ்சிதாவும் சென்னை தி.நகர் வீட்டில் இருந்து திடீரென தலைமறைவானார்.

சாமியார் பற்றி நாளுக்கு நாள் பரபரப்பு தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அவரது பிரதான சீடரும் சேலத்தை சேர்ந்த மாஜி தொழிலதிபருமான நித்ய தர்மானந்தா, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து விளக்கம் அளித்தார். தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் புகார் கொடுத்தார். இதையடுத்து, நித்யானந்தா மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக தமிழக உள்துறை செயலாளர் மாலதி மூலமாக கர்நாடகா டிஜிபிக்கு தமிழக டிஜிபி லத்திகா இன்று கடிதம் அனுப்புகிறார். அதோடு சேர்ந்து வழக்கும் கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது.

சாமியார் நித்யானந்தா மோசடி செய்துவிட்டதாக பல தரப்பில் இருந்தும் புகார்கள் குவிகின்றன. இதையடுத்து, மோசடி வழக்கை மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். பெங்களூரில் தனிப்படையினர் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமியார் இருப்பிடம் பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில், அவரது வக்கீல் ஸ்ரீதர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு சிடியை வெளியிட்டார். அதில் இருந்த வீடியோ காட்சியில் நித்யானந்தா பேசினார். “சட்டப்படி நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறேன். இன்னும் இரண்டொரு நாளில் முழுமையான ஆதாரங்களை திரட்டிய பிறகு, உங்கள் மத்தியில் முழுமையாக வெளியிடுகிறேன். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்” என்றார். ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. நித்யானந்தா பேசுவது போன்ற இந்த சிடி எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம் என்றும் போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அனைத்து முக்கிய நகரங்களிலும் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை அவர் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமான நிலையங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் போலீசார் கூறியுள்ளனர். நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்