| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான மெட்ரிக் பள்ளிகள் வாதத்தை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:27.55 AM GMT +05:30 ] |
அரசு பள்ளி மாணவர்களை மட்டமாக கருதக் கூடாது மெட்ரிக் பள்ளிகளின் வாதத்தை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
சமச்சீர் கல்வி திட்டத்துக்கு தடை கோரி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் சிலம்பண்ணன், முத்துக்குமாரசாமி ஆகியோர் ஆஜராகி, “சமச்சீர் கல்வியால் தரமான மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும். மெட்ரிக் பள்ளியில்தான் தரமான மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் மெட்ரிக் பள்ளி மாணவர்களை ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டு சமச்சீர் கல்வி முறையை கொண்டுவர முயற்சிப்பது சட்டவிரோதம். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும்” என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் மற்றும் அரசு சிறப்பு வக்கீல் ஜி.சங்கரன் ஆஜராகி, “தனியார் பள்ளிகள் தரப்பு வாதத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அரசு பள்ளி மாணவர்களை மட்டமாக பேசக் கூடாது. கிராம, மாநகராட்சி பள்ளிகளிலும் படித்த பலர் பல சாதனைகளை புரிந்துள்ளனர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் தரமானவர்கள் என்ற வாதத்தை ஏற்கக் கூடாது. அரசு பள்ளிகளிலும் தரமான மாணவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்” என்றனர்.
இருதரப்பு வாதத்தைகேட்ட நீதிபதி, “அரசு பள்ளி மாணவர்களை மட்டமாக கருதக் கூடாது. அவர்கள் தரமற்றவர்கள் என்பதை ஏற்க முடியாது. அரசு பள்ளியிலும் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில்தான் பயிற்சி பெற்ற கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றனர். எனவே இந்த வாதத்தை தொடர வேண்டாம்” என்றார். விசாரணை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|