| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM GMT +05:30 ] |
சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். |
நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது.
இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார்.
இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்.
இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இவ்வாறு அவர் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|