| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பென்னாகரம் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 04:52.53 PM GMT +05:30 ] |
பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது. |
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27&ம் தேதி நடக்கிறது. பல்வேறு கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பென்னாகரம் தொகுதியில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சிகள், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 15 ஊராட்சிகள், பென்னாகரம், பாப்பாரப்பட்டி ஆகிய 2 பேரூராட்சிகள் உள்ளன. சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலின்படி, பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 1,98,525 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் & 1,01,695, பெண் &96,830. இதில் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இறுதி வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் 19&ம் தேதிக்கு பிறகு பிரசாரம் செய்ய உள்ளனர். அதற்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்கு மத்திய அரசின் 5 கம்பெனி படையினர் ஓரிரு நாளில் வருகின்றனர்” என்றனர்.
தேர்தலை கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சய் ஆர் பூஸ்ரெட்டி நேற்று மதியம் தர்மபுரிக்கு வந்தார். அவரை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அமுதா வரவேற்று தொகுதி விவரங்களை விளக்கினார். பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் அதிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அவர் இன்று மாலை சென்று பார்வையிடுகிறார். மற்றொரு பார்வையாளர் அகூஜா நாளை மறுநாள் வருகிறார்.
தேர்தலை கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சய் ஆர் பூஸ்ரெட்டி நேற்று மதியம் தர்மபுரிக்கு வந்தார். அவரை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அமுதா வரவேற்று தொகுதி விவரங்களை விளக்கினார். பென்னாகரம், பாப்பாரப்பட்டியில் அதிக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு அவர் இன்று மாலை சென்று பார்வையிடுகிறார். மற்றொரு பார்வையாளர் அகூஜா நாளை மறுநாள் வருகிறார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|