| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| மீனவர் சங்கத் தலைவர் மனைவி கொலையில் கல்லூரி மாணவர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:31.41 PM GMT +05:30 ] |
மீனவர் சங்க மாநில தலைவரின் மனைவி கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். |
எண்ணூர் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். மின்வாரிய ஊழியரான இவர், தென்னிந்திய மீனவர் சங்க மாநில தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சுபானி, நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். சுபானி அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் செல்போன் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கொலை நடப்பதற்கு முன்பு பன்னீர்செல்வத்தின் செல்போனில் ஒருவர் பேசியுள்ளார். அந்த நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் களத்தில் இறங்கினர். அவர்கள் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். செல்போன் டவர் மூலம் கண்காணித்ததில், கொலையாளி திருவொற்றியூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர், எண்ணூர் தாளங்குப்பத்தை சேர்ந்த பார்த்திபன் (25) என்பதும், தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது.
போலீசில் பார்த்திபன் அளித்த வாக்குமூலம் வருமாறு:
சுபானியின் பக்கத்து வீட்டில் வசிக்கிறேன். அவர் வீட்டுக்கு அடிக்கடி பால் வாங்க சென்றதால் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளத்தொடர்பாக மாறியது. அவரது கணவர் வேலைக்கு சென்றபிறகு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருப்போம். இது ஒரு வருடம் நீடித்தது.
இந்நிலையில், மீஞ்சூரை சேர்ந்த எனது நண்பர் நீரேந்திரனுக்கு சுபானியை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவருடனும் சுபானிக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் பன்னீர்செல்வத்துக்கு அரசல் புரசலாக தெரியவந்தது. அதனால் எங்களை வீட்டுக்கு வரக்கூடாது என்று சுபானி கூறிவிட்டார்.
சில நாட்கள் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. கோபம் தணிந்திருக்கும் என்று நினைத்து கடந்த 30&ம் தேதி இருவரும் சுபானி வீட்டுக்கு சென்றோம். வீட்டில் சுபானி தனியாக இருந்தார். எங்களை பார்த்ததும், வெளியே தள்ளி கதவை பூட்டினார். அவமானத்தால் ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய திட்டம் வகுத்தோம்.
சம்பவத்தன்று நான் மட்டும் சுபானி வீட்டுக்கு சென்றேன். என்னை பார்த்ததும் கதவை பூட்டினார். ‘மூடாதே, ஒரு விஷயம் பேச வேண்டும்’ என்று கூறினேன். ‘உன்னிடம் பேச முடியாது, இங்கிருந்து நீ போய் விடு’ என்று கோபத்தில் கத்தினார். ‘நான் சொல்வதை பொறுமையாக கேள். எனக்கு திருமணமாக போகிறது. அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும். மாதிரி இருக்கிறதா என்று கேட்கத்தான் வந்தேன்’ என்றேன். அதை நம்பி கதவை திறந்து சேரில் உட்கார வைத்தார். பின்னர் காபி போட்டு வருகிறேன் என்று கூறி சமையல் அறைக்கு சென்றார்.
அந்த நேரத்தில் நீரேந்திரனுக்கு போன் செய்து வரவழைத்தேன். பால் வாங்குவதுபோல் சுபானி வீட்டுக்கு வந்தார். காபியுடன் வந்த சுபானி, நீரேந்திரனை பார்த்ததும், ‘அவன் எதற்கு வந்தான்’ என்றார். ‘திருமண அழைப்பிதழ் அடிப்பது சம்பந்தமாக’ என்று கூறினோம். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் இருவரையும் வெளியே போகும்படி கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுபானியின் வாயை நீரேந்திரன் பொத்தினான். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்தேன். வயிற்றில் சரமாரியாக குத்தினேன். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இறந்து விட்டார் என்பதை தெரிந்து கொண்ட பின்னர், கொலையை மறைக்க அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றோம். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
இதைத் தொடர்ந்து மீஞ்சூரில் பதுங்கியிருந்த நீரேந்திரன் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவர், பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர்களிடம் இருந்த செயின் பறிமுதல் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடித்த தனிப்படையினரை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|