| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு, குழந்தைகளுக்கு மடிக்கணிணி: துணைமுதல்வர் வழங்கினார் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:12.35 AM GMT +05:30 ] |
பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். |
மேலும், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 10 ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கும், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களின் 5 குழந்தைகள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலிருந்து 16 பால் உற்பத்தியாளர்களின் குழந்தைகள் ஆகிய 31 குழந்தைகளுக்கு மடிக்கணினிகளை துணை முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
பரிசு பெற்ற பால் உற்பத்தியாளர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெவித்தனர். மடிக்கணினிகளை பெற்ற மாணவ- மாணவியர்களின் பெற்றோர்களும் இந்த திட்டம் குழந்தைகளின் கல்வித்திறனை மேலும் ஊக்குவிக்கும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். இதுபோல் ஆவின் ஊழியர்களும், பால் உற்பத்தியாளர்களும் நன்றி தெரிவித்தனர்.
இந்தியத் தர நியம நிறுவனம் (பி.ஐ.எஸ்) சென்னை ஆவின் நிறுவனத்திற்கு சிறப்பான சுற்றுப்புறசூழல் மேலாண்மையை மேற்கொண்டு வருவதன் அடிப்படையில் உலகத்தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 14001: 2004 சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதை தென் பிராந்திய பி.ஐ.எஸ். நிறுவன துணை இயக்குநர் ஜெனரல் கே.அன்பரசு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஆவின் நிறுவனத்திற்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், தலைமைச்செயலாளர் ஸ்ரீபதி, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் அபூர்வ வர்மா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|