| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவர்களுக்கு திறனறிதல் தேர்வு |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 05:15.44 PM GMT +05:30 ] |
மருத்துவர்களின் திறனை அறிய ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. |
டாக்டர் பட்டம் பெற்றதும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால்தான் டாக்டர் தொழில் புரிய முடியும். ஆனால், அதன்பிறகு ஒரு முறை கூட அந்த பதிவை புதுப்பிக்க வேண்டியதில்லை.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்தது. இதன்படி, டாக்டர்கள் தங்கள் பதிவை குறித்த காலத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று கடந்த 1999ம் ஆண்டு மத்திய அரசுக்கு மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. கடந்த 11 ஆண்டுகளாக இதை கிடப்பில் போட்ட மத்திய அரசு, இப்போது பரிந்துரையை பரிசீலிக்க தொடங்கி உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய் கூறியதாவது:
மருத்துவ கவுன்சிலின் பதிவேட்டில் 1933ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 70 ஆயிரம் டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பலர் இறந்து இருக்கலாம், வெளிநாடுகள் சென்று இருக்கலாம். ஆனால், அவர்களது பெயர் இன்னமும் பட்டியலில் உள்ளது. இதனால், நாட்டில் மொத்தம் உள்ள டாக்டர்கள் எண்ணிக்கையை கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படுகிறது. இதுதவிர ஒரே டாக்டர் பல மாநிலங்களில் இருந்து பதிவு செய்துள்ளார். இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க பதிவை புதுப்பிக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பதிவை புதுப்பிப்பது தவிர 5 ஆண்டுக்கு ஒரு முறை டாக்டர்களின் திறமையை சோதனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இது தவிர தொடர் மருத்துவ கல்வி வகுப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 30 மணி நேரம் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் டாக்டர்களுக்கு விதிக்கப்பட வேண்டும். இது போன்ற வகுப்புகளில் கலந்து கொண்டால்தான் மருத்துவ துறையில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை முறைகள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 4 ஆண்டுகளில் 200 போலி டாக்டர்களை மருத்துவ கவுன்சில் கண்டறிந்துள்ளது. அவர்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|