| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| ஆஸ்த்திரேலியாவில் இந்திய குழந்தை கொலைக்கு இனவெறி காரணமா? |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 06:40.54 AM GMT +05:30 ] |
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு சோகம் தொடர்கிறது. சுற்றுலா வந்த குடும்பத்தின் 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்டது. கொலை யாளி பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். |
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது தொடர்கதை. அதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அதுபற்றி இரு நாட்டு அரசுகளும் பேச்சு நடத்துகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஹர்பிரீத் கவுர் என்ற திருமணமான பெண்ணை காண, அவரது கணவரும் 3 வயது குழந்தை குர்ஷனும் இந்தியாவில் இருந்து சுற்றுலா வந்திருந்தனர். இந்த வார கடைசியில் தந்தையும், மகனும் தாயகம் திரும்ப இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குர்ஷன் திடீரென காணாமல் போனான். அவனை பல பகுதிகளில் பெற்றோர் தேடி அலைந்தனர்.
போலீசுக்கும் தகவல் தரப்பட்டு அவர்களும் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் மெல்பர்னில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் குர்ஷன் இறந்து கிடந்ததை நேற்று காலை கண்டுபிடித்தனர்.
இது இந்தியர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, 30 கி.மீ. தூரம் எப்படி போயிருக்க முடியும். அவனை யாராவது தூக்கிச் சென்று இனவெறியில் கொலை செய்தனரா என்று சந்தேகிக் கின்றனர்.
எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தும், குழந்தை பலியானதற்கான காரணம் தெரியாமல் போலீஸ் குழம்புகிறது. இதுபற்றி விக்டோரியா மாகாண கமிஷனர் சர் கென் ஜோன்ஸ் கூறுகையில், ‘’குர்ஷன் மரணத்துக்கு வெளிப்படையான அறிகுறி ஏதுமில்லை. சாட்சிகளுக்காக காத்திருக்கிறோம்.
இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. உண்மை தெரியாமல் யூகத்தை வெளியிட விரும்பவில்லை. அதேநேரம் இயற்கை மரணமாகவும் தெரியவில்லை” என்றார்.
3 வயது இந்தியக் குழந்தை மர்மமான முறையில் கொலையானதற்கு ஆஸி. பிரதமர் கெவின் ரூட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “இது நடந்திருக்கக் கூடாதது” என்றார் அவர். விசாரணை நீடிக்கிறது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|