இந்தியச் செய்தி
9 ஆண்டுகளாக உண்ணாநிலைப்போராட்டத்தில் இருந்தவர் விடுதலை
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 02:24.44 AM GMT +05:30 ]
இந்திய ராணுவத்தைக்கண்டித்து 9 ஆண்டுகளாக உண்ணாநிலைப்போராட்டத்தில் இருந்த மணிப்பூர் இரோம் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூரில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார். திங்கள்கிழமை இரவு விடுதலையான அவர் தனது உண்ணாவிரப் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.

மணிப்பூரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு 1958-ம் ஆண்டு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் தீவிரவாதிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். கடந்த 2000-ம் ஆண்டு நவம்பரில் இம்பாலில் அசாம் ரைஃபிள் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தினைத் திரும்பப்பெற கோரியும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கினார்.

போராட்டத்தை கைவிடக் கோரி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து விடுதலையான அடுத்த சில நாள்களில் போராட்டத்தினை மீண்டும் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.

இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன் ஷர்மிளா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் உடல் நிலை மிகவும் மோசமானதால் சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனைக் காவல் அளிக்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தை அங்கும் தொடர்ந்ததால், உணவுக் குழாய் மூலம் திரவ உணவு அவருக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனைக் காலம் முடிந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் ஷர்மிளா விடுதலை செய்யப்பட்டார். உடனே அவர் போரம்பட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஷர்மிளாவின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, அவரது அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள், போரம்பட்டில் கடந்த ஓர் ஆண்டாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். விடுதலையான ஷர்மிளா தனது அமைப்பினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்