தமிழ்நாட்டுச் செய்தி
ஆசிரம படுக்கையறையில் நித்தியானந்தாவுக்கு நடிகையின் மசாஜ்
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 01:57.10 PM GMT +05:30 ]
நித்யானந்தாவின் காவி உடைகளை கழற்றிவிட்டு அவரது உடல் முழுவதும் எண்ணெய் தடவி நடிகை ரஞ்சிதா மசாஜ் செய்வது போன்ற படங்கள் தற்போது வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் 3 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்ற புது தகவலும் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் தியான வகுப்புகள், சொற்பொழிவுகள் நடத்திவந்தவர் நித்யானந்தா. இவரது ஆன்மீக கட்டுரைகள், பேச்சுக்கள் வார இதழ், டிவிக்களிலும் வெளியாகிவந்தன. 30&க்கும் அதிகமான நாடுகளில் 1,200&க்கும் அதிகமான இடங்களில் ‘நித்யானந்த தியான பீடம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இது அவரது பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெங்களூரில் உள்ள தலைமை ஆசிரமம், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களை மக்கள் சூறையாடினர். மோசடி, பலாத்காரம் உள்பட நித்யானந்தா மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், அதே படுக்கை அறையில் நித்யானந்தாவுக்கு நடிகை ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துவிடுவதுபோன்ற புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரத்தில் ரஞ்சிதாவும் வருகிறார். சாமியின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு பிறகு சட்டையையும் கழற்றிவிடுகிறார். வெறும் வேட்டியுடன் நித்யானந்தா உட்கார்ந்திருக்க அவரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ரஞ்சிதா மசாஜ் செய்கிறார். இவ்வாறு வரிசையாக படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படுக்கை அறை காட்சிகள் கடந்த டிசம்பர் 25&ம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டது காட்சியில் உள்ள நேரத்தில் தெரிகிறது.

நித்யானந்தாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக சேலம் மாஜி தொழிலதிபரும் நித்யானந்தாவின் முக்கிய சீடருமான லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். நித்யானந்தாவின் மோசடியை அம்பலப்படுத்தவே வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதாக பேட்டியளித்தார். இந்த வீடியோ காட்சிகள் கடந்த டிசம்பர் 23, 24, 25&ம் தேதிகளில் எடுக்கப்பட்டதாகவும் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் லெனின் கூறியுள்ளார்.

ஓரிரு நாளில் நித்யானந்தா நேரில் வந்து விளக்கம் அளிப்பார் என்று ஆசிரம நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்.

இதுவரையில் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை தமிழக, கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் பதுங்கியிருக்கலாம், ஹரித்வார் கும்பமேளாவுக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதால் அங்கும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ரஞ்சிதா கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்