| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பிரபல கொள்ளையன் காதலியுடன் தற்கொலை |
| [ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 05:57.19 PM GMT +05:30 ] |
தென் மாவட்டங்களை கலக்கிய பிரபல கொள்ளையன், கள்ளக்காதலியுடன் பழநி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். |
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜ் என்ற சக்திவேல் (42). நெல்லை, நாசரேத், சுரண்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வீடுபுகுந்து கொள்ளையடித்தும், வழிப்பறியில் ஈடுபட்டும் வந்தார்.
தென் மாவட்டங்களை கலக்கிய சக்திவேல் மீது நெல்லை கோர்ட்டில் மட்டும் 20&க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சக்திவேலுவுக்கு 5 மனைவிகள் உள்ளனர். கொள்ளையடித்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து உல்லாசமாக இருந்து வந்தார்.
தற்போது சீவலப்பேரியை சேர்ந்த பேச்சியம்மாள் (30) என்ற கள்ளக்காதலியுடன் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் குடும்பம் நடத்தி வந்தார். சமீபத்தில் மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சியில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது 75 பவுன் நகையை ரோட்டில் வீசிவிட்டு இருவரும் தப்பிவிட்டனர். நகையை கைப்பற்றிய போலீசார், சக்திவேலை தேடி வந்தனர்.
இந்நிலையில், பழநியில் உள்ள ஒரு லாட்ஜில் சக்திவேலும் பேச்சியம்மாளும் நேற்று மயங்கிக் கிடந்தனர். இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது. அவர்களை ஊழியர்கள் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர். இதுகுறித்து பழநி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் பிடியில் சிக்காமல் தப்பி வந்த சக்திவேலை சுட்டுப் பிடிக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதை தெரிந்து கொண்ட அவர், கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் தன்னை கண்டுபிடிக்காமல் இருக்க சக்திவேல் ஆயிரக்கணக்கில் செலவு செய்து முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இளமையான தோற்றத்துடன் உடலை வைத்துக் கொள்ள கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு முன்பு சக்திவேல், சீவலப்பேரி காவல் நிலையம் அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். அவரை வேறு யாரோ என்று போலீசார் நினைத்துள்ளனர். சக்திவேல் வீட்டை காலி செய்து சென்ற பிறகே உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|