| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: சிவசங்கர் மேனன் கருணாநிதி ஆலோசனை |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 05:55.05 AM GMT +05:30 ] |
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து சென்னையில் நேற்று முதல்வர் கருணாநிதியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தினார். |
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, வெளியுறவு செயலாளராக இருந்த சிவசங்கர் மேனன் கடந்த மாதம் 22ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பிறகு முதல்முறையாக தமிழகத்துக்கு நேற்று வந்தார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து முதல்வர் கருணாநிதியுடன் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தினார்.
இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் அவர்களுடைய ஊர்களிலேயே குடியமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
முதல்வரை சந்தித்த பிறகு, நிருபர்களுக்கு சிவசங்கர் மேனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
முதல்வருடன் நடந்த சந்திப்பின்போது பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினோம். குறிப்பாக, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது பற்றி முதல்வர் மிகுந்த கவலை தெரிவித்தார். மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தினார்.
இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும் முதல்வர் கவலை தெரிவித்தார். இதை மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும், இந்த பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதை எல்லாம் மத்திய அரசு தொடர்ந்து செய்யும் என்றும் அவரிடம் உறுதி அளித்தேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் போருக்கு முன்பு வசித்த இடங்களிலேயே தமிழர்களை மீண்டும் குடியமர்த்தவும், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது பற்றியும் அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேசி வருகிறது. இலங்கையில் வாழும் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அதை பயன்படுத்தி முடிந்த வரையில் எல்லா பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சிவசங்கர் மேனன் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|