| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| பீகார் ரிக்ஷாக்காரருக்கு அமெரிக்க அம்பாஸிடர் அழைப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:53.56 PM GMT +05:30 ] |
பீகார் ரிக்ஷா ஓட்டுனர் இர்பான் ஆலமுக்கு அமெரிக்கா வர அமெரிக்க அம்பாஸிடர் திமோத்தி ரோமர் அழைப்பு விடுத்துள்ளார். |
பீகார் மாநிலத்தின் வீதியில் சமீபத்தில் அரிதான காட்சி ஒன்றைக் கண்ட அம்மாநில மக்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர். அமெரிக்க அம்பாஸிடர் திமோத்தி ரோமர் தனது இந்தியப்பயணத்தின் போது பாட்னா சென்றிருந்தார்.பாட்னாவை சுற்றிப்பார்க்க சென்ற போது அங்கு அவருக்கு ரிக்ஷா கண்ணில் பட்டது. அதை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் துளிர் விட்டது. உடனே அவர் தனது ஆசையை செயல்படுத்த விரும்பினார். ரிக்ஷாவை ஓட்டிப்பார்த்ததோடு மட்டுமல்லாமல் ரிக்ஷா ஓட்டுனர் இர்பான் ஆலமை அமெரிக்கா வர அழைப்பும் விடுத்துள்ளார். எனவே விரைவில் இர்பான் அமெரிக்க அதிபரை சந்திக்க உள்ளார். அங்கு நடைபெற உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கிலும் இர்பான் கலந்து கொள்ள உள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் வசிப்பவர் ரிக்ஷா ஓட்டுனர் இர்பான் ஆலம். இவர் அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவருக்குள் எழுந்தது. இதன் விளைவாக உதித்ததுதான் ரிக்ஷா ஓட்டும் எண்ணம். பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் இர்பான், இவாகளுக்கு தலைவனாகவும் விளங்குகிறார். இவர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரிக்ஷாவில் பயணிக்கும் நேரங்களை பயனுள்ளதாகக் கழிக்க தினசரிகளை வழங்கினார். அதுமட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குவதையும் இவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இது குறித்து இர்பான் கூறியதாவது:
நான் படிப்பை முடித்த பின் ஏதாவது தொழில் செய்ய விரும்பினேன். அப்போது உதித்ததுதான் ரிக்ஷா ஓட்டும் எண்ணம். செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏறப இதில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த செய்திதாள்கள், குடி தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வழங்க முடிவு செய்து அதை செயல் படுத்தவும் செய்தேன். எந்த தொழிலாக இருந்தாலும் நேர்மையும் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியைத்தேடித்தரும் என்பதை எனது தொழிலும் செயலுமே எனக்கு உணர்த்தியுள்ளது. எனது அடுத்த முயற்சி அனைத்து ரிக்ஷா தொழிலாளர்களுக்கும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு, உடை, வீடு என்பதை குறிப்பாக குறைந்த செலவில் சொந்த வீடு என்ற கனவை நிறைவு செய்வதுதான். அமெரிக்கா வருமாறு எனக்கு அழைப்பு வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். அங்கு நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதன் மூலம் உலகில் உள்ள பலவேறு தொழில் முனைவர்களை சந்திக்க இருக்கிறேன். தொழிலில் மேலும் பல முன்னேற்றங்கள் செய்வது குறித்து அறிந்து கொள்வேன்.
 |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|