இந்தியச் செய்தி
தலைமை தேர்தல் ஆணையாளர் மீதான புகார்கள் அம்பலம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:10.06 AM GMT +05:30 ]
தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை நீக்கும்படி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி எழுதிய கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இக்கடிதத்தை வெளியிட ஜனாதிபதி மாளிகை மறுத்த நிலையில், சட்ட அமைச்சகம் வெளியிட்டு அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தலைமை தேர்தல் கமிஷனராக இருக்கும் நவீன் சாவ்லா, முன், தேர்தல் கமிஷனராக இருந்தார். அப்போது, இவரை பதவி நீக்கம் செய்யும்படி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த கோபாலசாமி கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் உள்ள விவரங்களை வெளியிட வேண்டும் என, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், ராஜஸ்தான் பில்வாராவைச் சேர்ந்த ரனாவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.ஆனால், கடிதத்தில் உள்ள விவரங்களை வெளியிட, நவீன் சாவ்லா எதிர்ப்பு தெரிவிப்பதால், அதை தர முடியாது என, ஜனாதிபதி மாளிகை கூறிவிட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதிக்கு கோபாலசாமி எழுதிய கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

93 பக்கங்கள் கொண்ட கடிதத்தில் கோபாலசாமி கூறியுள்ளதாவது:தேர்தல் கமிஷனராக இருக்கும் நவீன் சாவ்லா, பாரபட்சமாக செயல்படுவதாக, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் 179 எம்.பி.,க்களும் என்னிடம் புகார் மனு அளித்துள்ளனர். நான் சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், தேர்தல் கமிஷனர் பதவியில் நீடிக்க சாவ்லா தகுதியானவரா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். தேர்தல் கமிஷனராக சாவ்லா நீடிப்பது நியாயமற்றது என்பதே எனது முடிவு.அரசியல் சட்டப் பிரிவு 324 (5)ல் உள்ள விதிகளின் அடிப்படையில், சாவ்லாவை தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்து நீக்கும்படி பரிந்துரை செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது. சாவ்லா, ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதற்கு ஆதரவாக, 12 சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன். இதனால், ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் அவர் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார் என்ற சந்தேகமும் எழுகிறது.

அரசியல் கட்சிகளிடம் சாவ்லா நடுநிலைமையோடு நடந்து கொள்ளாதது மட்டுமின்றி, மற்றொரு தேர்தல் கமிஷனரான குரேஷியையும் தன் பக்கம் இழுக்க முற்பட்டுள்ளார். குரேஷி மீது குற்றச்சாட்டு கூறி, அவரை தன் வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். இந்த செயல் சரியானதல்ல.கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில், "தலைமை தேர்தல் கமிஷனரோடு சேர்ந்து கொண்டு, சோனியாவுக்கு எதிராக நீ செயல்படுகிறாய். அதனால், சோனியா உன் மீது கோபத்தில் உள்ளார்' என்று குரேஷியிடம் சாவ்லா கூறியுள்ளார். இதை குரேஷி என்னிடம் தெரிவித்தார். இதுபோன்ற நிர்பந்த தந்திரங்கள் தேர்தல் கமிஷனரகத்திற்கு உகந்தது அல்ல. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் மத்தியில், அது மனரீதியான உளைச்சலை ஏற்படுத்தி விடும். ஏனெனில், தேர்தல் கமிஷன் ஒரு நடுநிலைமையான அமைப்பு.

கடந்த 2007ம் ஆண்டில், உ.பி.,யில் தேர்தல் அறிவிப்பை வெளியிட தயாரான போது, அதை தள்ளிவைக்க வேண்டும் என, சாவ்லா விரும்பினார்." ஜனாதிபதி ஆட்சி அமலாகட்டும், அதன்பின் தேர்தலை நடத்தலாம்' என்றார். காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டபடிதான், அவர் இந்தக் கோரிக்கையை எங்களிடம் முன்வைத்தார். உடன், நாங்கள் இந்தப் பிரச்னையை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கடந்த 2005 மே மாதத்திற்கு முன், ஒரு ஆண்டு மூன்று மாத காலம் நான் தேர்தல் கமிஷனராக பணியாற்றினேன். அப்போது எந்த ஒரு தேர்தல் கமிஷனரும், யாரும் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியதில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், 2004 பொதுத் தேர்தல், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடந்தன.

சாவ்லா, நீண்ட காலமாக அரசியல் அமைப்பு ஒன்றுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் அறக்கட்டளைக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் கமிஷனர் பதவி வகிக்கும் போதே இதை செய்துள்ளார். அதனால் இதுவே அவர் தேர்தல் கமிஷனர் பதவியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய போதுமானது. இதைக் கொண்டே அடுத்து அவர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கு வரலாமா என்பதையும் தீர்மானிக்கலாம்.இவ்வாறு கோபாலசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.இக்கடிதத்தை வெளியிடக் கூடாது என்று நவீன் சாவ்லா ஏற்கனவே கூறியுள்ள போது, இது வேறுவிதமாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்