| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்கள் இல்லை: மு.க.ஸ்டாலின் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:43.20 AM GMT +05:30 ] |
தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்ற டெல்லி மாநாட்டில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். |
டெல்லியில் நேற்று 2வது நாளாக நடந்த முதல்வர்கள் மாநாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
பிரதமரின் வழிகாட்டுதல்படி உள்துறை அமைச்சர் மேற்கொண்ட அணுகுமுறையால் 2009ம் ஆண்டில் நாட்டில் பெரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும், உள்நாட்டு பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள சவால்களை முறியடிப்பதிலும் மத்திய அரசு முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மாநில போலீசும், உளவுத் துறையும் இடைவிடாமல் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 3வது போலீஸ் கமிஷனின் பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. மாநில போலீஸ் அகாடமி முழு அளவில் இயங்குகிறது.
பிரிவு சார்ந்த நியமனம் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் காரணமாக மாநில தொழிற் பாதுகாப்பு படை தனியாக அமைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், மாநில போலீசின் தலையீட்டுக்கு உட்பட்டு தொழில் ரீதியில் தனியார் பாதுகாப்பு ஏஜென்சி அமைப்பதை ஆதரிக்கிறோம். இதற்கென தனி சட்டத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
கடந்த முறை நடந்த மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீசின் நிர்வாகத்தை மேம்படுத்த ஒரு புதிய மாவட்டம், ஒரு துணைப் பிரிவு, 10 போக்குவரத்துப் பிரிவு, ஒரு போலீஸ் நிலையம் போன்றவை அமைக்கப்பட்டன. 10 புறக்காவல் நிலையங்கள் முறையான போலீஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் 600 கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
28 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 212 சப்&இன்ஸ்பெக்டர்கள், 4,339 போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2006ல் எங்கள் அரசு பதவி ஏற்றதில் இருந்து 11,167 போலீஸ்காரர்கள், 741 சப்&இன்ஸ்பெக்டர்கள், மற்றும் தொழில்நுட்ப சப்& இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக 476 போலீசார் கொண்ட குற்றவியல் உளவுத்துறை அமைக்கப்பட்டுள்ளது. 600 புதிய பணியிடங்கள் உருவாக்கப் பட்டதன் மூலம் மாநில உளவுத்துறை வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
உளவுத்துறை போலீஸ் ஐ.ஜி. (உள்நாட்டு பாதுகாப்பு) பதவி தனியாக ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. உளவுத்துறையின் கீழ் சிறப்பு விசாரணைப் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தரமான கட்டுப்பாட்டு அறை உள்ளது. சர்வதேச தரத்துடன் உளவுத்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். எனவே, தனி உளவுப் படை அமைப்பதை தமிழ்நாடு ஆதரிக்கவில்லை என்பதை கடந்த கூட்டத்திலேயே தெரிவித்து விட்டோம்.
தீவிரவாதத்துக்கு எதிர்த்து போரிட தரமான செயல்பாட்டுக்கான விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. துரித படைப் பிரிவுகள் எல்லா மாவட்டங்களிலும் மற்றும் முக்கிய நகரங்களிலும் செயல்படுகின்றன. வெடிகுண்டுகளை கண்டு பிடித்து செயல் இழக்கச் செய்யும் பிரிவுகளும் நல்ல தரத்துடன் இயங்குகின்றன.
போலீஸ் துறையில் மின்னணு நிர்வாகத்தை கொண்டு வருவதில் வெற்றி அடைந்துள்ளோம். டி.ஜி.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் உதவிக்காக இலவச தொலைபேசி சேவை உள்ளது. தனியாக இணையதளம், வலை தளங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. போலீஸ் துறையை நவீனமாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. போலீஸ் திறன் அதிகரிப்பு மற்றும் பயிற்சிக்காக மத்திய அரசிடம் ரூ. 51 கோடி நிதியுதவி கேட்கப்பட்டது. இந்த நிதி இன்னும் கிடைக்கவில்லை. தமிழக த்தில் நக்சல் தீவிரவாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை. கடலோர பாதுகாப்பை சோதிப்பதற்காக அண்மையில் ‘ரக்ஷாக்’ பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. 12 கடலோர போலீஸ் நிலையங்கள், 87 சோதனைச் சாவடிகள், மற்றும் 9 படகுகள் செயல்பாட்டில் உள்ளன. வழக்கமான ரோந்து பணிக்காக கூடுதலாக 11 வாடகை படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்தபோதிலும், இலங்கையுடனான எல்லையின் முக்கியத்துவம் முழுவதுமாக உணரப்படவில்லை. மத்திய, மாநில ஏஜென்சிகளிடையே நல்ல ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம் இருந்தால்தான் மீனவர்களை பாதுகாக்கவும், பாதுகாப்பற்ற பிற நடவடிக்கைகளை தடுக்கவும் இயலும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|