| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| பென்னாகரம் வாக்காளர் பட்டியல் இம்மாதம் வெளியீடு |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:50.46 AM GMT +05:30 ] |
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார். |
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
பென்னாகரம் தொகுதி திமுக எம்எல்ஏ பெரியண்ணன் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, தேர்தலை தள்ளி வைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்பின், இடைத்தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் கடந்த 2ம்தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர் பட்டியலில் 20 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை சேர்க்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்பட சில கட்சிகள் குற்றம் சாட்டின. அதிமுக தோழமை கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி சென்ற தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது:
பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்கள் விடுபட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இதனால் பட்டியல் வெளியிடுவது தாமதமாகியுள்ளது. தற்போது, அந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும் வாக்காளர் பட்டியலை டெல்லியில் சமர்ப்பிப்போம். அவர்கள் ஒப்புதல் அளித்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இம்மாத இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னரே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|