| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:52.02 PM GMT +05:30 ] |
காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். |
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள ரசாயன டேங்க் ஒன்றை மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யும் பணி இன்று காலை நடந்தது. இதையடுத்து தொழிற்சாலையில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் காலை 10.15 மணியளவில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கருப்பையா, முரளி படுகாயம் அடைந்தனர். இதில், கருப்பையாவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. கிரி, பிரகாசம், ராஜசேகர், நீலவண்ணன், எழில்வாணன் ஆகிய 5 ஊழியர்கள் லேசான காயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கருப்பையா, முரளியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|