| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| தெலங்கானா பிரச்னையில் எம்பிக்கள் ராஜினாமாவுக்கு விரைவில் முடிவு: மக்களவை சபாநாயகர் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 05:16.40 AM GMT +05:30 ] |
தெலங்கானா பிரச்சினையில் எம்.பி.க்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை வந்த மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். |
மக்களவை சபாநாயகர் மீராகுமார், டெல்லியில் இருந்து நேற்று நண்பகல் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில், காஞ்சிபுரம் விஸ்வநாதன் எம்பி, ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ உட்பட பலர் வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களுக்கு மீராகுமார் அளித்த பேட்டி:
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தமிழும் இடம் பெற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உங்களை நேரில் சந்தித்து வலியுறுத்த போவதாக கூறியுள்ளாரே?
அவர் வரவை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அவர் வந்து என்னிடம் பேசலாம். கவனமாக கேட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன். ஆந்திர எம்பிக்கள் சிலர் தனி தெலங்கானா கோரி, பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர். அதன்மீது உங்கள் முடிவு என்ன? சில எம்.பி.க்களின் கடிதம் முறையானதாக அமையவில்லை. சரிவர எழுதப்படாத ராஜினாமா கடிதங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. முறையான கடிதங்களை பரிசீலித்து வருகிறேன். விரைவில் ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு எடுக்கப்படும். வரும் 22ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றி?
இந்த கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் மற்றும் பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட இருக்கின்றன.
நாடாளுமன்றம் சுமூகமாக நடக்க எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பார்களா?
கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க உதவ வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன். இவ்வாறு மீராகுமார் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|