| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| சட்டீஸ்கரில் மருந்துப்பொருட்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:19.22 AM GMT +05:30 ] |
சட்டீஸ்கர் சுகாதாரத் துறையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் தலைமறைவாக உள்ளார். |
சட்டீஸ்கரில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 2008ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மீண்டும் பா.ஜ.,வே வெற்றி பெற்றது. முந்தைய ஆட்சி காலத்தில் சுகாதார துறையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக பரவலாக புகார் எழுந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் இதுகுறித்து கடுமையாக விமர் சித்தன.இதையடுத்து, முதல்வர் ராமன் சிங் களத்தில் இறங்கினார். முந் தைய ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறையில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கும்படி போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.விசாரணையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழல்கள் நடந்துள் ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
சட்டீஸ்கரில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு மலேரியா நோய் அதிகம் பரவும். இதை கட்டுப்படுத்துவதற் காக உலக வங்கி, கடந்த 2004-05ல் 20 கோடி ரூபாயை ஒதுக்கியது. மலேரியாவை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் மலேரியாவை கண்டுபிடிக்கும் மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது. இதில் தான் பெரிய ஊழல் நடந்துள்ளது. அப்போது, சுகாதாரத் துறையில் இருந்த அதிகாரிகள், மருந்துகள் எதுவும் வாங்காமல், மருந்துகள் வாங்க பணம் கொடுக்கப்பட்டதாக, போலியான பில் தயாரித்துள் ளனர்.இந்த முறைகேட்டை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குனர்கள் பிரமோத் சிங், சர்வா மற்றும் ஓய்வு பெற்ற இயக் குனர் சென் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனைக்கு, இதய பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் "கலர் டாப்லர்' சாதனம், மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது.
இந்த சாதனங்கள் வாங்கப் பட்டு, ஒரு ஆண்டே ஆகியுள்ள நிலையில், செயல்படாமல் போயின. விசாரணையில், இந்த சாதனங்கள் வாங்கப்பட்ட நிறுவனம், ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்தது. இது தொடர் பாகவும், இந்த மூன்று இயக்குனர்கள் மீது சட்டீஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதேபோல், "சிரின்ஞ்' வாங் கியதிலும் 1.5 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.வழக்கமான விலையை விட, மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, துறை ரீதியான விசாரணைக் கும் உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்குப் பதிவு செய்யப்பட்ட அதிகாரிகளில் டாக்டர் சென், முன் ஜாமீன் பெற்றுள்ளார். டாக்டர் சர்வா போலீஸ் காவலில் உள்ளார். மற்றொரு அதிகாரியான பிரமோத் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.சட்டீஸ்கரில் நடந்துள்ள இந்த மெகா ஊழல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|