தமிழ்நாட்டுச் செய்தி
தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை ஒடுக்க 2 உளவுப் பிரிவு
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 07:07.20 AM GMT +05:30 ]
தமிழகத்தில் சில நாட்களாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகதான் சென்னையில் ரவுடி திண்டுக்கல் பாண்டியன், கூட்டாளியுடன் சுட்டுக் கொல்லப்பட்டான். அதேபோல மதுரையில் 2 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரவுடிகளுக்கு போலீசார் குறி வைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரவுடிகளை முற்றிலும் ஒடுக்கும் நோக்கில், ‘தொடர் குற்றங்களை கண்டுபிடிக்கும் உளவுப் பிரிவு’ (ஓ.சி.ஐ.யூ) ஒன்றை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரிவு ஒரு எஸ்பி தலைமையில் இயங்கும். தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் பட்டியலை தயாரித்து, அவர்களை கண்காணிக்கும். அவர்களின் நடமாட்டங்கள், எதிர்கால திட்டங்களை உளவுப் பார்த்து, துறை ஐஜி ஜாபர்சேட் மூலம் டிஜிபி லத்திகா, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரிவிப்பார்கள். அவர்கள் மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த பிரிவு தொடங்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு டிஜிபி லத்திகா கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு முன்னதாக அதிரடிப் படை எஸ்பியாக உள்ள திருநாவுக்கரசு, அயல் பணி என்ற அடிப்படையில் உளவுத் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அவர்தான் ரவுடிகள், தொடர் குற்றவாளிகள் பற்றிய பட்டியலை சேகரித்து வருகிறார். தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரவுடிகளின் பட்டியலில் உள்ளனர். அவர்களை வகைப்படுத்தி ஆய்வு செய்து வருகிறார்.

அதேபோல, சிபிசிஐடியில் உள்ள சிறப்பு புலனாய்வு அமைப்பாக எஸ்ஐடி என்ற பிரிவும் உளவுத் துறையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான அனுமதி கேட்டும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு கோவை குண்டுவெடிப்பு உட்பட பல குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து வருகிறது. உளவுத் துறையுடன் இணைக்கப்பட்ட பிறகு, வெடிகுண்டு வழக்குகளோடு தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கும் குற்ற வழக்குகளையும் விசாரிப்பார்கள்.

குறிப்பாக இரு மாநிலம் தொடர்புடைய கள்ளநோட்டு வழக்குகள், தீவிரவாதிகள் பற்றிய வழக்குகள், நக்சலைட் தொடர்பான வழக்குகளை அவர்கள் விசாரிப்பார்கள். இந்த இரு பிரிவுகளுமே உளவுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தமிழகத்தில் பெரிய அளவில் நடக்கும் குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்