தமிழ்நாட்டுச் செய்தி
வீட்டில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் கஞ்சா பறிமுதல்
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:32.07 PM GMT +05:30 ]
வீட்டில் பதுக்கி கஞ்சா விற்ற தாய், மகன் கைது செய்யப்பட்டனர். ரூ.7 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவொற்றியூரில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனி 1&வது தெருவை சேர்ந்தவர் புஷ்பா (47). இவரது வீட்டுக்கு அடிக்கடி வெளியாட்கள் அதிக அளவில் வந்து சென்றனர். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

புஷ்பா, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் ஒரு அறையில் 2 மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதை போலீசார் பறிமுதல் செய்தனர். புஷ்பாவை பிடித்து விசாரித்தனர்.

புஷ்பாவின் கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தனது மகன் செங்குட்டுவனுடன் (25), ஆந்திராவில் இருந்து கஞ்சா வரவழைத்து வியாபாரம் செய்துள்ளார். திருச்சியில் இருந்து சிலர் வாங்கி சென்றுள்ளனர். மேலும் சிலருக்கு விற்று வந்துள்ளார் என்பது விசார ணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து புஷ்பா மற்றும் அவரது மகன் செங்குட்டுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 46 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்