இந்தியச் செய்தி
பெரியாறு அணை வழக்கில் மீண்டும் ஒரு குழு தேவையில்லை: தமிழக அரசு மனு
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:33.40 AM GMT +05:30 ]
‘முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கடந்த 2006ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கேரள அரசு அதை அமல்படுத்தாமல் தவிர்க்க, அணைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் இந்த சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த பெஞ்ச் கடந்த பிப்ரவரி மாதம் 3 வாரங்கள் விசாரணை நடத்தியது. அதில் அணையின் உறுதி, ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை நியமனம் செய்ய உத்தர விட்டது.

இந்த குழுவில் மத்திய அரசு சார்பில் 2 பேரும், தமிழகம், கேரளா சார்பில் தலா ஒருவரும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரள அரசு சார்பில் இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் உறுப்பினராக இருப்பார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு சார்பில் இந்த குழுவில் உறுப்பினர் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகம் சார்பில் குழுவில் இடம்பெற உள்ள உறுப்பினர் பெயரை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு ஏ.எஸ். ஆனந்த் கடிதம் எழுதினார். இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை பற்றி விசாரிக்க நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டதை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற வேண்டும். ஏ.எஸ். ஆனந்த் குழுவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதி இடம்பெற தேவையில்லை என்று முடிவு எடுத்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

அணை வழக்கை ஆய்வு செய்ய உயர்நிலை குழு அமைத்ததன் மூலம் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பையும், அதிகாரத்தையும் இந்த குழுவிடம் ஒப்படைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏற்கனவே அணையின் பலம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவையான ஆதாரங்கள் உள்ள நிலையில், அதன் அடிப்படையில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்