| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| நடுத்தெருவில் காதலன் காதலி கட்டிப் புரண்டு சண்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:43.07 PM GMT +05:30 ] |
திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காதலனும் காதலியும் நடுத்தெருவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பரஸ்பரம் அடித்துக்கொண்டதில் காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
சென்னை ராயபுரம் ராமானுஜர் தெருவில் வசிப்பவர்கள் ரமேஷ், பிரகாஷ். இரு வீட்டினருக்கும் இடையே நல்ல உறவு இருந்துவந்தது. ரமேஷுக்கு 18 வயதில் மகனும், பிரகாஷுக்கு 17 வயதில் மகளும் உள்ளனர். இருவரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கின்றனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு இரு வீட்டினரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சம்மதித்துள்ளனர். பெண்ணுக்கு 17 வயது ஆவதால், ஓராண்டு முடிந்ததும் திருமணம் செய்துகொள்வதாக ரமேஷ் வீட்டார் தெரிவித்தனர்.
திருமணத்தை தள்ளிப்போடவே இவ்வாறு சொல்கின்றனர் என்று நினைத்த காதலியும், அவரது தாய் லதாவும் நேற்று காதலன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். ‘வாசலில் நின்று கத்தாதே. எதுவாக இருந்தாலும் வீட்டுக்குள் வைத்து பேசிக்கொள்ளலாம்’ என்று காதலன் கூறினான்.
இருவரும் தொடர்ந்து வாசலில் நின்று கூச்சல் போட்டதால் காதலியுடன் காதலன் சண்டை போட்டான். வாக்குவாதம் கைகலப்பாக மாறி, காதலர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு, முடியைப் பிடித்து சண்டையிட்டனர். கடுமையாக தாக்கிக் கொண்டதில் இருவரும் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் விலக்கிவிட்டு அவர்களை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|