| | | |
| |
| | | |
| |
தமிழ்நாட்டுச் செய்தி
| வரதராஜனின் மரணம் தற்கொலையே: காவல்துறை ஆணையாளர் தெரிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 02:00.49 PM GMT +05:30 ] |
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜனின் மரணம் தற்கொலையே என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். |
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன், கடந்த மாதம் 11ம் தேதி காணாமல் போனார். இதுகுறித்து, கமிஷனர் ராஜேந்திரனிடம் வரதராஜனின் மனைவி சரஸ்வதி புகார் செய்தார். இந்நிலையில், 13ம் தேதி அவரது உடல் போரூர் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது குடல் பகுதி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மத்தியக் குற்றப் பிரிவு போலீசாரிடம் டாக்டர்கள் நேற்று அளித்தனர்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:
குடல் பரிசோதனையில் அவர் விஷம் சாப்பிடவில்லை என்பது உறுதியானது. பிரேதப் பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கியதால் மூச்சுத் திணறியே இறந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. உடலில் சிறு, சிறு காயங்கள் உள்ளன.
ஆனால், அதனால் மரணம் ஏற்படவில்லை. அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆய்வு செய்தனர். ஏரிக்குள் சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டு வரும் பெரிய பைப்புகள் உள்ளன. அந்த பைப்புக்கு செல்ல ஒரு அடி அகலத்தில் பாதை உள்ளது. அந்த பாதையில் வரதராஜன் நடந்து சென்று தண்ணீரில் விழுந்துள்ளார். அப்போது அடிபட்டு, காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்களின் ஆய்வில் தெரிய வந்தது. அது சிறு காயங்கள்தான். அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|