தமிழ்நாட்டுச் செய்தி
ரஜினி படங்களில் நடித்த கோயில் பூசாரி அடித்துக் கொலை
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 06:52.05 AM GMT +05:30 ]
கோயில் வளாகத்தில் எச்சில் துப்பியதை கண்டித்த பூசாரியின் மூக்கில் குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வில்லிவாக்கம் கிழக்கு குளக்கரை தெருவை சேர்ந்தவர் வைத்யநாதன் (61). இவர், அதே பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயில் பூசாரி. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே திருக்கம்பேடு கிராமம், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த செல்வம் மகன் அங்கப்பன் (24), ஆட்டோ டிரைவர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அங்கப்பன் ஆட்டோ ஓட்டி வந்தார். தினமும் இரவு நாகத்தம்மன் கோயில் வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்குவார். அப்போது பான்பராக் மென்று, எச்சிலை கோயில் வளாகத்தில் துப்பி, வாந்தி எடுத்து அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் அருவறுப்பு அடைந்த வைத்யநாதன், கோயில் வளாகத்துக்குள் ஆட்டோ நிறுத்தவும், தூங்கவும் கூடாது என்று கூறி அங்கப்பனை கண்டித்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோயில் வளாகத்தில் ஆட்டோவை நிறுத்திய அங்கப்பன், எச்சில் துப்பி கோயில் வளாகத்தை அசிங்கப்படுத்தினார். இதை கண்டித்த வைத்யநாதன், கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும்படி கூறினார். அதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த அங்கப்பன், கையால் வைத்யநாதன் மூக்கில் ஓங்கி குத்தினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த வைத்யநாதனின் வாய், மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மயக்க நிலையில் இருந்த வைத்யநாதனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தகவல் அறிந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் சந்திரசேரகன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெங்கடேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கப்பனை கைது செய்தனர்.

வைத்யநாதனுக்கு ராஜலட்சுமி (57) என்ற மனைவியும், வெங்கடேஷ், ரமேஷ் என 2 மகன்களும், பட்டம்மாள் என்ற மகளும் உள்ளனர். மேலும், ரஜினிகாந்த் நடித்த பாபா, ராகவேந்திரா, தனுசு நடித்த சுள்ளான் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் வைத்யநாதன் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அங்கப்பனுக்கும் பாரதி நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம்

பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல்

சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்