தமிழ்நாட்டுச் செய்தி
பண்ருட்டி, ராமநாதபுரம் அருகே அதிகாலை பேருந்து விபத்தில் ஐவர் பலி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:29.44 PM GMT +05:30 ]
பண்ருட்டி அருகே இன்று அதிகாலை அரசு, தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாயினர். மேலும் கண்டக்டர் உள்பட 35 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு தனியார் பஸ் ஒன்று 40 பயணிகளுடன் பண்ருட்டி வழியாக சென்று கொண்டிருந்தது. பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த சிவப்பிரகாசம் (58) ஓட்டினார். இன்று அதிகாலை விழுப்புரம்&பண்ருட்டி சாலையில் திருமலைநகர் அருகே வந்த போது, முன்னால் சென்ற அரசு பேருந்தை டிரைவர் சிவப்பிரகாசம் முந்த முயன்றார். அப்போது எதிரே கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி 42 பயணிகளுடன் வந்த அரசு விரைவு பேருந்து நேருக்கு நேர் மோதியது. 2 பஸ்களின் முன்பகுதியும் முற்றிலும் சேதமடைந்தது.

இதில் தனியார் பஸ் டிரைவர் சிவப்பிரகாசம் (58), அரசு விரைவு பேருந்து டிரைவர் பாலசுப்ரமணியன் (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி இறந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் விழுப்புரம்&பண்ருட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன்(48), சாகுல்ஹமீது(45), சீனிக்காதர்(45) ஆகியோர் காரில் மதுரைக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு மீண்டும் ராமநாதபுரத்துக்கு சென்றனர். காரை ராதாகிருஷ்ணன் ஓட்டிச்சென்றார். இவர்கள் சென்ற கார் ராமநாதபுரம்நகர் எல்லையான கூரியூர் விலக்கு அருகே சென்றபோது, மனநிலைசரியில்லாத பெண் ஒருவர் ரோட்டின் குறுக்கே வந்துள்ளார்.

அவர் மீது மோதிவிடாமல் இருக்க காரை ராதாகிருஷ்ணன் திருப்பியுள்ளார். இருப்பினும் அந்த பெண் மீதும் மோதிவிட்டு எதிரே வந்த அரசு பஸ் மீதும் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காருக்குள் நசுங்கி, ராதாகிருஷ்ணன், சாகுல்ஹமீது ஆகியோர் இறந்தனர்.
படுகாயமடைந்த சீனிக்காதர், மற்றும் மனநிலைசரியில்லாத பெண் இருவரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் அடையாளம் தெரியாத அந்தப்பெண்ணும் இன்று காலையில் இறந்தார். சீனிக்காதர், மேல்சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் அமைச்சர் சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்பி மற்றும் கட்சியினர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ராதாகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்