இந்தியச் செய்தி
இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:08.07 PM GMT +05:30 ]
தொடர்ந்து இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் நடக்கும் தாக்குதல்கள் நீண்ட கால அடிப்படையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் சுஜாதா சிங் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலிடம் எச்சரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் குயென்டின் பிரைஸ்&இந்தியத்தூதர் சுஜாதா சிங் சந்திப்பு கடந்த வெள்ளியன்று நடந்தது. இந்த சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தை விவரங்களை தி ஏஜ் பத்திரிகை விரிவாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
ஆஸ்திரேலியா முழுக்க இனவெறியுடன் இயங்குவதாக இந்தியா கருதவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில்இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் நூற்றுக்கு மேல் நடந்துள்ளன.

இந்த இனவெறித் தாக்குதல்களின் எண்ணிக்கை கூட எங்களிடம் இல்லை என ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரபூர்வமாகக் கூறுகிறது.
இந்தியர்கள் மீது நடந்த தாக்குதல்கள் குறித்து நியூசவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் உள்ள போலீசார் சிறப்பாக விசாரணை நடத்துகின்றனர். ஆனால் விக்டோரியாவில் உள்ள போலீசார் தாக்குதல்கள் இடம்பெறவே இல்லை என்று மறுக்கும் மன நிலையில்தான் உள்ளனர். இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையானவை அல்ல என அவர்கள் சாதிக்கின்றனர்.

இந்தியர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலும் நடவடிக்கைகள் அவசியம். இல்லாவிடில் இதன் விளைவுகள் கடுமையானதாக அமையும்.

ஆஸ்திரேலிய சம்பவங்கள் குறித்து ஒரு தலைப்பட்சமாக இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவை செய்தி வெளியிடுவதாக திரும்பத் திரும்ப கூறப்படுகிறது. இவ்வாறு குற்றம் சாட்டுவதும் குறை கூறுவதும் எந்த வகையிலும் பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது. இவ்வாறு சுஜாதா சிங் கூறியதாக தி ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்