| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| ஆந்திராவில் பி.டி.பருத்தி பயிரிட்டதால் பல கோடி நட்டம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 08:18.07 AM GMT +05:30 ] |
பி.டி.பருத்தி பயிரிட்டதால் பல கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் ஆந்திரப்பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். |
பி.டி.பருத்தி பயிரிட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும், பருத்தியை பூச்சிகள் தாக்காது என்று அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டேரி கூறியது. இதை உண்மை என நம்பி இந்திய அரசு பி.டி. பருத்தி பயிரிட அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து குஜராத், ஆந்திராவை சேர்ந்த விவசாயிகள் மான் சான்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கி பி.டி. பருத்தியை பயிரிட்டனர்.
சமீபத்தில் குஜராத்தில் பயிரிட்ட பி.டி.பருத்தியை பூச்சிகள் கடுமையாக தாக்கின. இதனால் அங்குள்ள விவசாயிகள் அனைவரும் பெரும் நஷ்டம் அடைந்தனர்.
இதையடுத்து மான் சான்டோ நிறுவனம் பி.டி. பருத்தியை பூச்சிகள் தாக்கும் என்பதை ஒப்புக் கொண்டது.
ஆந்திராவில் வாரங்கல், கம்மம் ஆகிய மாவட்ட விவசாயிகள் மான்சான்டோ, மகிகோ நிறுவனங்களிடம் இருந்து பி.டி.-1 பருத்தி, பி.டி.-2 பருத்தி ஆகிய விதைகளை வாங்கி பயிரிட்டனர். பி.டி.பருத்தியில் பூச்சி தாக்காது, அதிக விளைச்சல் தரும் என்று நினைத்து அந்த பி.டி.விதைகளை அதிக விலை கொடுத்து வாங்கினர்.
ஆனால் பி.டி.பருத்தி அனைத்திலும் பூச்சிகள் தாக்கின. இதனால் 2 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகளுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்கள் கூறும் போது, “மான்சான்டோ நிறுவன ஊழியர்கள், புரோக்கர்கள் எங்கள் கிராமங்களுக்கு வந்து பி.டி. பருத்தி பயிரிட்டால் பல மடங்கு விளைச்சல் வரும் என்றார்கள். இதனால் விதைகளை அதிக விலை கொடுத்து வாங்கினோம். ஆனால் விளைச்சலே இல்லை. எங்களை மான்சான்டோ நிறுவனம் ஏமாற்றி விட்டது.
இயற்கையான பருத்தி பயிரிட்டிருந்தால் எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும் எங்களை ஏமாற்றி பி.டி.விதைகளை விற்ற நிறுவனங்களை சும்மா விட மாட்டோம்.
எங்களுக்கு அந்நிறு வனம் நஷ்டஈடு தரக்கோரி போராட்டத்தில் குதிப்போம்.
சர்வதேச நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. அதையெல்லாம் விட்டு விட்டு எங்களைப் போன்ற ஏழை விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. சர்வதேச விதை நிறுவனங்களுக்கு துணை போகும் அரசியல் தலைவர்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் நாட்டில் இனி மரபணு பயிர்கள், காய்கறி-பழங்கள் பயிரிட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் தற்கொலை செய்யும் அவலநிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|