இலங்கைச் செய்தி
நடிகை ரம்பாவின் மணமகன் புலி ஆதரவாளர் அல்ல: ரம்பாவின் அண்ணன் மறுப்பு
[ புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010, 10:11.01 AM GMT +05:30 ]
நடிகை ரம்பா திருமணம் செய்யவிருக்கும் கனடாவாழ் இலங்கைத்தமிழர் இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லையென்று நடிகை ரம்பாவின் அண்ணன் வாசு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. “உள்ளத்தை அள்ளித்தா”, “உழவன்”, “செங்கோட்டை”, “சுந்தர புருஷன்”, “அருணாசலம்”, “விஐபி”, “காதலா காதலா”, “மின்சார கண்ணா” உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திரனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இந்திரன் மேஜிக்வுட்ஸ் என்ற பெயரில் சமையலறை, பாத்ரூம் இன்டீரியர் டிசைனிங் கம்பெனி நடத்துகிறார். இலங்கை தமிழர்.

“மேஜிக் வுட்ஸ்” நிறுவனம் ரம்பாவை சில மாதங்களுக்கு முன் விளம்பர தூதுவராக நியமித்தது. அப்போது இந்திரனுக்கும் ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. ரம்பாவுக்கு பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டு சொகுசு காரை இந்திரன் பரிசாக வழங்கினார். சமீபத்தில் இருவருக்கும் சென்னை நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 8-ந்தேதி திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திரன் பற்றி புது வதந்தி பரவி வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு தலைவர்களுடன் இந்திரனை தொடர்புபடுத்தி புரளி கிளப்பி உள்ளனர். இந்த குற்றச்சாட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் மறுக்கிறார்கள். இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லை என்றும் அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர் இந்தியா வருவதற்கு விசா அளிப்பதன் மூலம் இதை அறிய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ரம்பாவின் அண்ணன் வாசு கூறியதாவது:-

இந்திரன் பற்றி நல்லா விசாரிச்சுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். நாங்கள் இந்த திருமணத்தில் திருப்தியாக இருக்கிறோம். எந்த குழப்பமும் இல்லை. இந்திரன் வேறு மாதிரியான ஆள் கிடையாது. அவர் பாஸ்போர்ட்டை கூட நான் வாங்கி பார்த்து இருக்கிறேன். தப்பாக எதுவுமே இல்லை.

என் தங்கை ரம்பாவை பெண் கேட்டு இந்திரன் அம்மா வந்தார். செங்கல்பட்டு அருகில் அவர்களுடைய மேஜிக்வுட்ஸ் கம்பெனி இருப்பதாக சொன்னார். நாங்கள் அவர் குடும்பம் பற்றி விசாரித்தோம். எல்லாம் உண்மை என்று தெரிந்து கொண்டோம்.

இந்திரனின் தந்தை பெயர் பத்மநாபன். விடுதலைப்புலிகள் தலைவர் பத்மநாபன் என்று தவறாக புரிந்து இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு வாசு கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]

சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]

22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து

கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு

இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்

குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு

விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்

அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்