| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் |
| [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010, 05:40.33 AM GMT +05:30 ] |
நேற்று முன் தினம் இரவு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். |
ராமேஸ்வரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சேதுராமன் என்பவரின் படகு உள்ளிட்ட 20 படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தனர். அப்போது, இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்தது.
கப்பலில் இருந்த கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டவாறே வந்தனர். பின், தமிழக மீனவர்களின் படகுகள் மீது கப்பலை மோதி சேத ப்படுத்தினர். படகுகளில் இருந்த வலைகளை சேதப்படுத்தி, ஐஸ் பெட்டிகளை கடலில் தூக்கி வீசினர். இறால் மீன்களை பறித்து கொண்டனர். மேலும், இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் பொன்னுச்சாமி (35), லோகு (35), குணம்(45), நாகராஜ்(55) ஆகியோர் காயமடைந்தனர். பின்னர், இனிமேல் இந்த பகுதிக்கு வரக் கூடாது என எச்சரித்து விட்டு சென்றனர்.
கடந்த 2 நாள் முன்பு, கச்சத்தீவு பகுதியில் சகாயம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசைப்படகு மீனவர் கூட்டமைப்பின் செயலாளர் போஸ் கூறியதாவது:
தமிழக மீனவர்களில் இரட்டை மடி மீன்பிடிப்பவர்கள் இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்தும், சேதப்படுத்தியும் வந்து விடுகின்றனர். இதனால் கோபமடையும் இலங்கை கடற்படை தமிழக எல்லைப்பகுதிக்கே வந்து தமிழக மீனவர்களை தாக்குவது தொடர்கதையாகிறது. இரட்டை மடி வலைக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் இவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இலங்கையில் தேர்தல் நடந்ததால் சிறிது காலம் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தியிருந்த இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|